Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய சிறு குறுந் தொழில் வர்த்தகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

தொழில் நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் உலகை வேகமாக ஆக்கிரமித்து வருகின்றன. மாறிவரும் ஆனால் தவிர்க்க முடியாத இந்த தேவையை கருத்தில் கொண்டு ஹெனிக்கன் மார்க்கெட்டிங் மலேசியா தனது சமூகப் பொறுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, வசதி குறைந்த இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தில் இலவச பயிற்சி அளிக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தொழில் முனைவோரின் வணிகத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் பயிற்சி இது.
இந்த பயிற்சி வரும் மே மாதம் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் நடைபெறும். இந்த தொழில்நுட்ப பயன்பாடுகளை பற்றிய பயிற்சியை சிறப்பான முறையில் பயின்று தங்களது வர்த்தக வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளும் 3 பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
10 இடங்கள் மட்டுமே உள்ளதால் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இறுதி நாளான வரும் 22 ஆம் தேதி ஏப்ரல் மாதத்திற்குள்
017-207 7527 என்ற தொலைபேசி வாட்ஸ்ஆப் உலகத்தின் வழி உங்கள் விபரத்தை பதிவு செய்து கொள்ளலாம். சுலபமான வகையில் உங்கள் பெயர், வயது, வியாபார நிறுவனத்தின் பெயர் மட்டும் தொழில் விவரம் ஆகியவற்றை மட்டுமே பதிவு செய்தால் போதுமானது.
இது ஹெனிக்கனின் டைகர் மலேசியா மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் சமூக மேம்பாட்டு முயற்சியாகும். இந்திய சிறுகுறுந் தொழில் முனைவோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பலன் பெறும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular