Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

BMM பேராளர்கள் குழு ஜானா சந்திரனுடன் சந்திப்பு!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பொறியியல் நிறுவனத்தின்
(SIAEC) துணை நிறுவனமான பேஸ் மெய்ன்டெனஸ் மலேசியா(BMM) நிறுவனத்தின் பேராளர்கள் குழுவினர் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜானா சந்திரன் முனியனுடின் சந்திப்பு நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையில் BMM பேராளர்கள் குழுவிற்கு சின் யாவ் சிங் தலைமை ஏற்றார். மேலும் இந்த சந்திப்பில்
SIAEC நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, போக்குவரத்து அமைச்சின் வான் போக்குவரத்து பிரிவின் செயலாளர் முகமட் ராட்ஷூவான் மஸ்லான் மற்றும் அமைச்சின் இதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மலேசியாவில் BMM நிறுவனம் தனது ஆள்பலத்திற்கு திறன் கொண்ட அதிகமான மலேசியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது பெருமையை தருவதாக டத்தோஸ்ரீ ஜானா சந்திரன் கூறினார்.
மேலும் PERHEBAT மூலம் முன்னாள் ராணுவ வீரர்களையும் இந்த நிறுவனம் வேலைக்கு அமர்த்துவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என்றார் அவர்.
இந்த முயற்சிகள் நாட்டின் MRO தொழிற்துறை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதோடு, தொழில் திறன்மிக்க தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இந்த நிறுவனத்தின் வியூக மிக்க முதலீடுகளையும் தமது அமைச்சு வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular