
செராஸ் ஆக 16
கராத்தே கருத்தரங்கு மற்றும் தர நிர்ணய நிகழ்ச்சி PGA செராஸில் நடைபெற்றது.
KRAWIP & KSKA MALAYSIA ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர், ஜொகூர், சரவாக் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 130 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தைச் சேர்ந்த மாஸ்டர் சீதாலட்சுமி மூன்றாம் நிலை கருப்பு பட்டைக்கு சிறப்பு தேர்ச்சி பெற்றார்.
இந்த சங்கத்தைச் சேர்ந்த ரிஷாலினி இரண்டாம் நிலை கருப்பு பட்டைக்கு தேர்ச்சி பெற்றார்.

இச்சங்கத்தின் யோகிஷா தனபாலன் இரண்டாம் நிலை கருப்பு பட்டைக்கு தேர்ச்சி பெற்றார்.
கருப்பு பட்டைக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் விஜய் கூறினார்.

அதே வேளையில் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சென்ஸி மிர்ஷானுக்கு தாம் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாணவர்கள் கராத்தே போட்டியில் மேலும் உச்சநிலையை அடைய தாம் வாழ்த்துவதாக அவர் தெரிவித்தார்.


