Monday, May 4, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாதிக் ஏர் நிறுவனம்,விசிட் மலேசியா 2026 திட்டத்திற்கு முன்தாகஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையில் ஈடுபாடு!

விசிட் மலேசியா 2026 (ஏஆ2026) திட்டத்தின் முன்னோட்ட நடவடிக்கையாக, மலேசியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான பாதிக் ஏர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நுளுளுஹனு எனும் சிறப்பு சலுகைப் பயண அட்டைக் கூட்டமைப்புடன் கூட்டாண்மையில் சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

ESSAD அட்டையை வைத்திருப்பவர்கள் 2.5 லட்சம் பேர் இருக்கும் நிலையில், அரசு ஊழியர்கள், தனியார் துறையை சேர்ந்தோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இதில் அடங்குவர். இந்நிலையில், பதிக்க ஏர் நிறுவனம் இந்த நுளுளுஹனு அட்டைக்காரர்களுக்காக சிறப்பு சலுகைகள் மற்றும் சலுகை கட்டணங்கள் வழங்க உள்ளது. இதன் மூலம் மலேசியா, வேலை, மருத்துவ, வணிக மற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கான முன்னுரிமை வழி பயண இலக்காக மேம்படுத்தப்படுகிறது.

இக்கூட்டாண்மை, மத்திய கிழக்கு நாடுகளில் மலேசியாவின் கண்ணோட்டத்தை உயர்த்தும் விதமாகவும், தினசரி நேரடி டுபாய் – கோலாலம்பூர் விமான சேவைகள் மூலம் வருகையாளர்களை ஈர்க்கும் நோக்கிலும் அமைகிறது.

மேலும், மலேசியாவின் பிற பிரசித்திபெற்ற நகரங்கள் லங்காவி, பினாங்கு, கோத்தா கினபாலு, கூச்சிங் ஆகியவற்றுடன் இணைந்த பயண வசதிகளும் வழங்கப்பட்டு, பயணிகள் மலேசியாவை விரிவாக அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். இது உள்ளூர் சமூகங்களுக்கும், வியாபாரத்துக்கும் பேரளவில் நன்மை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக் ஏர், மலேசியாவை தெற்காசியாவின் சிறந்த பயண இலக்காக மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் தகவலுக்கு மற்றும் பயணத்திட்டங்களை அமைக்க, பாதிக் ஏர் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யவும் அல்லது றறற.யெவமையசை.உடிஅ இணையதளத்திற்குச் செல்லவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular