
உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா தனது விமான பணியாளர்களுக்கு புதிய சீருடையை அறிமுகம் செய்துள்ளது.
நேற்று கோலாலம்பூர் Fashion Week 2025 நிகழ்வில் இந்த புதிய சீருடையை ஏர் ஆசியா அறிமுகம் செய்தது.
மலேசியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளைச் சார்ந்த திறமைகளை இணைத்து இந்த புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது.
மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளை பயன்படுத்தி இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சீருடையை அணிபவர்கள் மேலதிக வசதி, சீரான தோற்றம் மற்றும் எளிதில் நடமாடும் சௌகரியம் ஏற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏர் ஆசியா எக்ஸ் ஜெட்டா மற்றும் மதினா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களுக்கு தனித்துவமான சீருடைகளை கூடுதலாக அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சீருடை 40 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளில் வடிவமைக்கப்பட்டவை. இது மென்மையான துணி, நெகிழ்வுத் தன்மை மற்றும் நீண்ட நேர பயண நேரத்தில் சௌகரியமாக இருக்க வசதிகளை கொண்டது.
இதனிடையே இந்த புதிய சீருடை எளிதில் பராமரிக்கக் கூடியவையாகவும் விமான பணியாளர்கள் தங்கள் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஏர் ஆசியா விமானப் பணியாளர்கள் குழும நிறுவனத்தின் தலைவர் சுஹாய்லா ஹாசான் கூறினார்.

‘இது வெறும் துணி மாற்றம் அல்ல, இது நாங்கள் எவ்வாறு எங்கள் ஊழியர்களின் நலனை முன்னிலைப்படுத்துகிறோம் என்பதை பிரதிபலிக்கிறது’ என்றார் அவர்.
விமானப் பணியாளர்கள் தங்கள் வேலை நேரத்தின் பெரும் பகுதியை சீருடைகள் செலவழிக்கின்றனர்.
ஆகையால் விமான பணியாளர்களின் சீருடை செயல் திறனுடன் கூடிய வசதியான மற்றும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை தங்களின் நோக்கம் என அவர் சொன்னார்.
இந்த புதிய சீருடை சுகாதாரமும், காற்றோட்டமும், சுதந்திரமான நடமாட்டத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் நாங்கள் ஒரு பொறுப்புள்ள வர்த்தகம் மற்றும் சமூகங்களை ஊக்குவிக்கும் நிறுவனம் என்பதை இது பிரதிபலிக்கிறது என அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த சீருடை நோக்கத்தையும் மற்றும் பெருமையையும் சித்தரிக்கின்றது என அவர் சுட்டிக் காட்டினார்.
விமானப் பணியாளர்கள் தான் இந்த விமான நிறுவனத்தின் உயிர் நாடி. ஆகையால் இவர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தவே இந்த புதிய சீருடை என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த ஆண்டு Air Asia மற்றும் KL Fashion Week இடையிலான 10 ஆவது ஆண்டு கூட்டான்மை கொண்டாடப்பட்டது.
இது ASEAN பிராந்தியத்திற்கான ஏர் ஆசியாவின் திறமை மற்றும் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் உறுதி பாட்டை காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மலேசியா பாப் இசை குழு DOLLA சிறப்பான இசை நிகழ்ச்சியை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து ASEAN முழுவதிலுமிருந்து ஏர் ஆசியா விமான பணியாளர்கள் பன்முகத்தன்மையை கொண்டாடும் ஒரு ஆடை அணிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


