Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கேஎல்ஐஏ2 உணவக மையத்தில் சந்தான் திறப்பு விழா கண்டது!

கேஎல்ஐஏ2 முனையத்தின் gateway@klia2-வில் உள்ள உணவக மையத்தில் கேப்பிட்டல் ஏ-யின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பான வணிக முத்திரை உணவகமான சந்தான் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.
இந்த சந்தான் உணவகத்தில் பிரபல ஆசியான் உணவு வகைகள், சந்தானின் சிக்னேச்சர் காபி மற்றும் விமானத்தில் விற்கப்படும் சுவையான உணவுகள் விற்கப்படுகின்றன.
இந்த ஒரு இடத்தில் பயணிகள் மற்றும் உணவு பிரியர்கள் விரும்பும் அனைத்து வகையான அறுசுவை உணவுகள் கிடைக்க பெறும்.
புகழ்பெற்ற பாக் நாசீர் நாசி லெம்மாக்,அங்கல் சின்’ஸ் சிக்கன் ரயிஸ்,தாய் கிரின் கறி வித் ரயிஸ்,நாசி பாடாங் ஃபிப் ரென்டாங் உட்பட பல சுவையான உணவு வகைகள் 14 வெள்ளிக்கு இங்கு கிடைக்கும்.
மேலும் சந்தானின் வைரலான ரெடி-டு-ஈட் தயாரிப்புகளான மாலா பீப் சூப் நூடல் வித் சிக்கன் ஸ்லைஸ்களும் கிடைக்கின்றன. இவை ஃப்ரீஸ்-ட்ரைடு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. சில நிமிடங்களில் சூடான திருப்திகரமான உணவை வழங்குகின்றன. இந்த உணவு வகைகளை வாங்கிச் சென்று வீட்டில் சுவைக்க வசதிகளும் உள்ளன.
சந்தான் ரசிகர்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய ஒரு பொருளாக மாறிய மற்றொரு வைரல் விருப்பமான தி ஓஜி பர்னட் சீஸ் கேட்கும் இந்த சந்தான் உணவகத்தில் விற்கப்படுகின்றன. மேலும் வாடிக்கையாளர்கள் தி பெஸ்ட் லேட், ஜீரோ பிஸ்டாச்சியோ லேட் மற்றும் ஜீரோ வரிசையில் இருந்து பெற புத்துணர்ச்சியூட்டும் பானங்கள் இந்த உணவகத்தில் விற்படுகின்றன.
இந்த திறப்பு விழாவை குறிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பாக் நாசீர் நாசி லெம்மாக்(வெ 14) விற்கப்படுகின்றன. சிறந்த சந்தான் லேட்டை வெ 5க்கு விற்கப்படுகின்றன. இதன் வழக்கமான விலை வெ 13 ஆகும்.
இதனிடையே ‘எங்கள் விமான சேவைகளுக்கு அப்பால், சந்தான் இப்போது உணவகங்கள், வசதியான கடைகள் மற்றும் சில்லறை விற்பனை சங்கிலிகள் மூலம் ரெடி-டு-ஈட் உணவு வகைகளை வழங்குவதாக சந்தான் தலைமை செயல்முறை அதிகாரி கேத்தரின் கோ கூறினார்.
ரெடி-டு-ஈட் உணவு வகைகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பேராதரவை பெற்று வருகிறது என அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2024-ல் அரை லட்சம் இந்த உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
gateway@klia2-ல் இந்த உணவகம் திறப்பு விழா கண்டதில் தாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.
இதனிடையே கேஎல்ஐஏ2 முனையத்தின் உணவக மையத்தில் இந்த சந்தான் உணவகம் திறப்பு விழா கண்டுள்ளது பயணிகளுக்கு ஒரு நற்செய்தி என நோம்னோம் பிராண்ட்ஸ் Sdn Bhd தலைமை நிர்வாக அதிகாரி டான் ஹூவா மிங் கூறினார்.
பயணிகளுக்கு அனைத்து வகையான உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதற்கு சந்தான் உணவகம் ஒரு உதாரணம் என்றார் அவர்.
பயணிகள் தாங்கள் விரும்பும் உணவு வகைகளை பல இடங்களுக்கு தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்த சுவையான உணவு வகைகள் வானத்தைத் தாண்டி அன்றாட வாழ்க்கையிலும் கொண்டு வருவது மகிழ்ச்சி தருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular