
கோலாலம்பூர் ஜூலை 7
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் தினத்தை நினைவு கூறும் வகையில் சிரோமா(SIROM), ஹெய்னெக்கன் மலேசியா பெர்ஹாட் (HEINEKEN Malaysia) மற்றும் சோகொங்(Sokong) ஒன்றிணைந்து 2025 நிலைத்தன்மை தினத்தை கொண்டாடியது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை மேம்படுத்துவதையும் மேலும் நிலையான உணவு முறைகளை உருவாக்குவதையும் மையமாகக் கொண்டு இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த கொண்டாட்டம் கடந்த 14 ஜூன் 2025 பகாங் மாநிலத்தின் பெந்தோங்கில் உள்ள GCC பண்ணையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் நிலைத்தன்மைக்கான இரண்டு முக்கிய அணுகுமுறைகள் வலியுறுத்தப்பட்டது.
உயிரின விவசாயம் மற்றும் கரிம உருமாக்கள் ஆகிய இந்த அணுகுமுறைகள் உணவு பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு சமூகத்தின் தீவிர பங்கு குறித்து வலியுறுத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் நேரடி பட்டறைகள், கல்வி செயல் விளக்கங்கள் மற்றும் சமூக உரையாடல்களில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு கற்றல், ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டின் அர்த்தமுள்ள தினமாக அமைந்தது. இந்த முயற்சியானது ஐக்கிய நாட்டு சபையின் சுற்றுச்சூழல் தின கருப்பொருளின் உணர்வை பிரதிபலித்தது.

‘நமது நிலம். நமது எதிர்காலம். நாம் தான் #தலைமுறை மறுசீரமைப்பு”
‘நிலைத்தன்மை தினம் என்பது விழிப்புணர்வை விட அதிகம்-இது செயல் பற்றியது’ என SIROM-மின் தலைவர் ரெபேக்கா லாய் கூறினார்.
அக்வா போனிக்ஸ் மற்றும் உரமாக்கல் உணவுக் கழிவுகள், நீர் பாதுகாப்பு மற்றும் நகர்புற விவசாய சவால்களுக்கு அளவிடக்கூடிய, குறைந்த கார்பன் தாக்க தீர்வுகளை வழங்குகின்றன. இந்த நடைமுறைகள் சமூகங்கள் தங்கள் சொந்த நிலைத்தன்மையை எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என்பதை நிரூபிக்கின்றன என அவர் சொன்னார்.
மீன் வளர்ப்பு மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முறையான அக்வா போன எக்ஸ், வழக்கமான விவசாயத்தை விட 90 விழுக்காடு குறைவான தண்ணீரைப் பயன்படுத்துகிறது மற்றும் ரசாயனம் இல்லாத ஆண்டு முழுவதும் உணவு உற்பத்தியை தருகிறது.
இதற்கிடையில் கரிம உரமாக்கல் சமையலறை மற்றும் தோட்டக் கழிவுகளை ஊட்டச்சத்து நிறைந்த மண்ணாக மாற்றுகிறது. மண் ஆரோக்கியத்தையும் பல்லுயிரியலையும் மேம்படுத்தும் அதே வேளையில் நிலப்பரப்பு பயன்பாட்டை குறைப்பதாக அவர் சொன்னார்.
இந்த நடைமுறை மலேசியாவின் நிலைத்தன்மை நிகழ்ச்சி நேரலை நேரடியாக ஆதரிப்பதோடு பல ஐ.நா நிலையான வளர்ச்சி இலக்குகள்(SDGs)-குறிப்பாக பூஜ்ஜிய பசி (SDG 2), பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி (SDG 12) மற்றும் காலநிலை நடவடிக்கை (SDG 13) ஆகியவற்றுடன் ஒத்துப் போகின்றன என அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே ஹெய்னெக்கன் மலேசியாவில் உண்மையான முன்னேற்றம் அடிமட்டத்தில் தொடங்குகிறது என நாங்கள் நம்புவதாக என ஹெய்னெக்கன் மலேசியாவின் விவகாரங்கள் மற்றும் சட்ட இயக்குனர் ரேணுகா இந்திராராஜா கூறினார்.

சோரோப்டிமிஸ்ட் இன்டர்நேஷனலுடனான எங்களின் கூட்டு ஒத்துழைப்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டு ஒத்துழைப்பில் உணவு பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த கூட்டு ஒத்துழைப்பில் பயிர்களை வளர்ப்பது மட்டுமல்லாமல் வாய்ப்பு மற்றும் நீண்ட கால தாக்கத்தை வளர்க்கிறோம் என அவர் சொன்னார்.
ஹெய்னெக்கன் மலேசியா சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக அதிகாரமளிப்பில்தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே சோகொங்கில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களையும், களத்தில் உண்மையான பணிகளை செய்யும் அடிமட்ட அமைப்புகளையும் இணைப்பதில் தாங்கள் பெருமை கொள்வதாக யாயாசான் மலேசிக்கினியின் சோக்கொங்கின் சமூக மற்றும் விற்பனை நிர்வாகி புத்ரி அஃபிக்கா மஸ்லான் கூறினார்.
வலுவான கூட்டாண்மைகளால் ஆதரிக்கப்படும் கூட்டு நடவடிக்கைகள் எவ்வாறு நீண்ட கால மாற்றத்தை தூண்டும் என்பதற்கு நிலைத்தன்மை தினம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார் அவர்.
சோரோப்டிமிஸ்ட் சர்வதேச தென்கிழக்கு ஆசிய பசிப்பிக்கின் கீழ் உள்ள ஒரு தேசிய அமைப்பான SIROM, நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் சமூகங்களை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நிலைத்தன்மை தினம் 2025 என்பது பசுமை நடைமுறைகளில் கொண்டாட்டத்தை விட அதிகம்-இது சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஒன்றிணைத்தால் என்ன சாத்தியம் என்பதை நினைவூட்டுகிறது ஏன் அவர் தெரிவித்தார்.
ஹெய்னெக்கன் மலேசியா, சோகொங் மற்றும் SIROM ஆகியவை நீடித்த மாற்றத்தின் விதைகளை நடுகின்றன-ஒரு வீடு, ஊர் தோட்டம் ஒரு நேரத்தில் ஒரு சமூகம் என அவர் சுட்டிக்காட்டினார்.


