Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உலக அமைதி உச்சிநிலை மாநாட்டில் கலந்து கொள்ள டாக்டர் ராகவிக்கு அழைப்பு!

எதிர்வரும் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெறவருக்கும் 11 ஆவது உலக உச்சி நிலை மாநாட்டில் கலந்து கொள்ளும்படி ராக் ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராகவி பவனேஸ்வரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இங்கு நடந்த ஒரு சந்திப்பில் HWPL மலேசிய கிளையின் பொது உறவு நிர்வாகி கெலி மிங் டாக்டர் ராகவிக்கு இந்த அவர் அழைப்பை விடுத்தார்.
11 ஆவது உலக அமைதி உச்சிநிலை மாநாடு எதிர்வரும் 18 மற்றும் 19 செப்டம்பர் 2025 ஆகிய தேதிகளில் தென் கொரியா தலைநகரான சியோல் நகரின் சியோங்ஜூ நகரில் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
சியோல் நகரில் தலைமையகத்தை கொண்ட உலக அமைதி இயக்கமான HWPL இந்த உச்சிநிலை மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
உலகில் அமைதியை நிலை நிறுத்தவும் போர்களை தவிர்க்கவும் Lee Man-hee தலைமையிலான HWPL போராடி வருகிறது.
இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும் தென் கொரியாவில் இந்த உச்சிநிலை மாநாடு நடைபெற்று வருகிறது.
நேற்றைய இந்த சந்திப்பில் HWPL மலேசிய கிளையின் நடவடிக்கைகள் குறித்து கெலி மிங் டாக்டர் ராகவியிடம் விளக்கம் தந்தார்.
HWPL மலேசிய கிளையின் இந்த தொண்டூழி பணிகளுக்கு தமது ராக்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என டாக்டர் ராகவி கெலி மிங்கிடம் உறுதியளித்தார்.
HWPL மலேசிய கலை நாட்டில் பல அமைதி பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் கூச்சிங்கில் உள்ள பாசீர் பாஞ்ஜாங் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் HWPL மலேசியா ஈடுபட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular