
சிறந்த தேசிய பூப்பந்து விளையாட்டாளர்களுக்கு முறையான பயிற்சி இடங்கள் வழங்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹான்னா இயோ வலியுறுத்தினார்.
பொதுமக்களுக்கும் திறக்கப்பட்டுள்ள மண்டபங்களில் இவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதை RTG குழு அறிந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிபுணத்துவ பூப்பந்து விளையாட்டுளர்களுக்கு தனியார் பயிற்சி நிலையங்கள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வாழ்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பேரங்காடிகளிலும் இவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதை தாம் உணர்ந்துள்ளதாக சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இந்த விவகாரம் குறித்து RTG திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டுவார்ட் ராமலிங்கம் முறையான ஏற்பாடுகளை செய்வார் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
நிபுணத்துவ விளையாட்டுளர்கள் தங்களின் விளையாட்டு தரத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக் காட்டினார்.
தமது தலைமையிலான RTG குழு இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே தேசிய இரட்டையர் பூப்பந்து விளையாட்டளர்கள் பெர்லி டான் மற்றும் எம்.தீனா ஆகிய இருவரின் விளையாட்டு ஒப்பந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசிய ஒப்பந்து சங்கத்துடனான இவர்களின் ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது.
இந்த விவகாரத்திற்கு மலேசிய தேசிய பூப்பந்து சங்கம் சரியான தீர்வை காண வேண்டும் என அவர் சொன்னார்.


