Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தனித்து செயல்படும் – பாத்தேக் ஏர் வரவேற்பு

எதிர் வரும் ஆக 1 ஆம் தேதி முதல் மலேசிய விமான போக்குவரத்து ஆணையும் தனித்து செயல்படும் என்ற அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக முன்னணி விமான நிறுவனமான பாத்தேக் ஏர் வரவேற்றுள்ளது.
மலேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் இந்த முடிவு அனைத்து தரப்பினருக்கும் நன்மையை தரும் என பாத்தேக் ஏர் அறிக்கை ஒன்றில் கூறியது.
அரசாங்கத்தின் இந்த முடிவு அனைத்து தரப்பினருக்கும் நன்மையை தரும் என்பதில் சந்தேகமில்லை.


அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு பாத்தேக் ஏர் முழுமையான ஆதரவை வழங்கும்.
இந்த புதிய நடவடிக்கைக்கு மலேசியா சிவில் போக்குவரத்து ஆணையத்திற்கு பாத்தேக் ஏர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அந்த அறிக்கை கூறியது.
அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு பாத்தேக் ஏர் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வரும் என அந்த அறிக்கை கூறியது.
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மலேசிய சிவில் போக்குவரத்து ஆணையம் தனித்து செயல்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நேற்று அறிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மலேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அரசாங்க நிர்வாகத்திடமிருந்து விலகி தனித்து செயல்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நேற்று கூறியிருந்தார்.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி இதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதாக அவர் சொன்னார்.
அதே வேளையில் இந்த நடவடிக்கையால் அடுத்த 10 ஆண்டுகளில் அரசாங்கம் 1.5 மில்லியன் மற்றும் 2 மில்லியன் வெள்ளி வரை சேமிக்க முடியும் என அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular