Friday, June 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜசெக மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப செயல்படவில்லை!

ஜசெக இந்நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப செயல்படவில்லை என பாஸ் ஆதரவு பிறவியின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த க் கட்சியின் பல விவகாரங்களில் தங்களின் நிலைப்பாடுகளின் காரணமாக மலேசிய மக்களின் ஆதரவை இக்கட்சி பெற முடியவில்லை என திரங்கானு மந்திரி பெசாரின் மலாய்காரர்கள் அல்லாத பிரிவின் சிறப்பு அதிகாரியுமான அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பல இடங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்பதை இக்கட்சி உணர வேண்டும் என்றார் அவர்.
நாட்டில் ஜனநாயக நடைமுறையில் அரசியல் கருத்து வேறுபாடுகள் நியாயமான ஒன்று தான். ஆனால் அதை தங்களின் அரசியல் லாபத்திற்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என அவர் சுட்டி காட்டினார்.
நாட்டின் வளர்ச்சி பொருளாதார மேம்பாட்டில் மட்டும் ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ள முடியாது. சமூகம், கலாச்சாரம் மற்றும் இதர அம்சங்களையும் இவற்றில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அதே வேளையில் அரசியல் விவாதம் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதுபோன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் மற்றும் வெறுப்புணர்ச்சி இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.
அரசியல் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் எந்த ஒரு இனத்தையும் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
இந்நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular