Sunday, June 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய ஆசியாவின் தாஷ்கண்ட் நகருக்கு ஏர் ஆசியா எக்ஸ் நேரடி விமான சேவை!

முன்னாள் சோவியத் யூனியன் குடியரசின் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் நகருக்கு ஏர் ஆசியா எக்ஸ் நேரடி விமான சேவையை மேற்கொள்ளவிருக்கிறது.
இந்த இஸ்லாமிய நாகரீக மைய நகரமான தாஷ்கண்ட் நகருக்கு வாரத்திற்கு 3 விமான சேவைகளை ஏர் ஆசியா எக்ஸ் மேற்கொள்ளவிருக்கிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மற்றொரு மத்திய ஆசிய நகரான காஜகாஸ்தானின் அல்மாட்டி நகருக்கு வெற்றிகரமான விமான சேவையை தொடர்ந்து இந்த புதிய பாதையில் ஏர் ஆசியா எக்ஸ் அடியெடுத்துள்ளது.
பயணிகளின் தேவை அதிகரிப்பால் அல்மாட்டி நகருக்கான வாராந்திர விமான சேவையை ஏர் ஆசியா எக்ஸ் அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா இடையிலான விமான போக்குவரத்தை வலுப்படுத்தும் வகையில் தாஷ்கண்ட் நகருக்கான நேரடி விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிய வட்டாரத்தின் விமான போக்குவரத்து வளர்ச்சியில் கோலாலம்பூர்-தாஷ்காண்ட் வழித்தடம் ஒரு முக்கிய மைல்கள் என ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பென்ஜாமின் இஸ்மாயில் கூறினார்.
உஸ்பெகிஸ்தான் பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி கண்டு வருவதால் அந்நாட்டில் உள்ள நடுத்தர மக்கள் புதிய நகர்களை கண்டு களிக்க இது ஒரு அற்புதமான வாய்ப்பு என அவர் சொன்னார்.


அல்மாட்டி நகருக்கான வெற்றிகரமான விமான சேவையை தொடர்ந்து மத்திய ஆசியாவிற்கு பயணிக்க விரும்பும் சுற்றுப் பயணிகளின் தேவை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் இந்த புதிய விமான சேவை பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தங்களின் பயணிகளுக்கு மறக்க முடியாத பயண அனுபவங்களை தருவதே எங்களின் இலக்கு என்றார் அவர்.
இதற்கு அல்மாட்டி நகருக்கான விமான சேவை ஒரு எடுத்துக்காட்டு என அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே கோலாலம்பூர்-தாஷ்கண்ட் நேரடி விமான சேவை ஒரு இனிய செய்தி என மலேசியாவிற்கான உஸ்பெகிஸ்தான் தூதர் கரோமிடின் கடோவ் கூறினார்.
இந்த நேரடி விமான சேவையின் மூலம் மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையிலான சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரம் வலிமை அடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்விரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மற்றும் கலாச்சார புரிந்துணர்வு ஒரு புதிய அத்தியாயத்தை காணும் என அவர் சொன்னார்.
மேலும் இவ்விரு நாடுகளுக்கிடையே முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசிய சுற்றுப் பயணிகள் தாஷ்கண்ட் நகரில் உள்ள பல அதிசயங்கள் மற்றும் அற்புதங்களை கண்டுகளிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு என அவர் குறிப்பிட்டார்.
தாஷ்கண்ட் நகரில் இஸ்லாமிய நாகரீகத்தை பிரதிபலிக்கும் கல்லறைகள் மற்றும் மசூதிகள் சுற்றுப் பயணிகளை அதிகம் கவரும் என அவர் சுட்டிக் காட்டினார்.
தாஷ்கண்ட் நகரில் உள்ள சந்தைகள், பூங்காக்கள் மற்றும் சுவையான உணவு வகைகள் சுற்று பயணிகளை அதிகம் கவரும் என அவர் சுட்டிக் காட்டினார்.


துரித பொருளாதார வளர்ச்சியை உஸ்பெகிஸ்தான் கண்டு வரும் வேளையில், தாஷ்கண்ட் நகருக்கான ஏர் ஆசியா எக்ஸின் இந்த நேரடி விமான சேவை மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நேரடி விமான சேவையால் உஸ்பெகிஸ்தான் பிரஜைகள் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் உள்ள நகரங்களை சுற்றி பார்க்க ஒரு அற்புதமான வாய்ப்பு என அவர் சொன்னார்.
தாஷ்கண்ட் நகருக்கான அனைத்தும் அடங்கிய ஒரு வழி ஊக்குவிப்பு கட்டணமான வெ 99 23 ஜூன் 2025-ல் தொடங்கி 29 ஜூன் 2025-ல் முடிவடைகிறது.
இந்த நிகழ்ச்சியில் மலேசிய சுற்றுலா துறையின் முகமட் அக்பால், ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் வர்த்தக பிரிவு தலைவர் அமான்டா வூ, மலேசியா சுற்றுலாத் துறையின் துணை தலைமை இயக்குனர் சுவா சுன் ஃவா, ஏர் ஆசியா எக்ஸின் டத்தோ பாம் லீ ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular