
இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நிதி குற்ற செயல்களை தவிர்க்க ‘மோசடியில் சிக்க வேண்டாம்’ என்ற திட்டத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நிதி கும்பல் எளிதில் லாபத்தை பெற இணையம் வழி நிதி மோசடி கும்பல் பல்கலைக்கழக மாணவர்களை குறி வைத்து வருவதாக அரச மலேசிய போலீஸ் பிரிவின் அறிவியல் ஆய்வு மற்றும் விசாரணை பிரிவின் தலைவர் எஸ்ஏபி வோங் இங் பூங் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் பல்கலைக்கழக மாணவர்களை நெருக்கமாக்க இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் இணையம் வழி நிதி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியை பெறுவது மட்டுமின்றி குற்றச் செயல்களின் தாக்கத்தையும் உணர வேண்டும் என அவர் சுட்டி காட்டினார்.
இந்நாட்டில் உள்ள சமூகத்திற்கு இடையே ஒரு நடுவராக பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசிய தேசிய பல்கலைக்கழகம் அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மலேசிய வங்கிகளின் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அவர் சுட்டி காட்டினார்.
இந்த முயற்சி இதர உயர்நிலை கல்வி கழகங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். உயர்நிலை கல்வி நிலை மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இந்த உயர் கல்வி நிலையம், அமலாக்க நிறுவனம் மற்றும் நிதித் துறை ஆகிய தரப்பினருக்கிடையிலான ஒத்துழைப்பு நாட்டின் பாதுகாப்பிற்கு மிக அவசியம் என அவர் சுட்டிக் காட்டினார்.
இலக்கியவியல் ரீதியில் குற்றச் செயல்களை ஒழிக்க அரசாங்கத்தின் முயற்சிக்கு இதுபோன்ற திட்டங்கள் அவசியம் என அவர் சொன்னார்.


