
இங்குள்ள அமான் ஜெயா கராத்தே பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கான கராத்தே பட்டயம் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த பட்டயம் வழங்கும் விழாவில் 50 மாணவர்கள் பங்கு பெற்றனர்.
அனைத்துலக ஷோடோகன் ஃபிட்னஸ் கழகத்தின் இந்த பட்டயம் வழங்கும் விழாவில் 100 பெற்றோர்கள் கலந்து கொண்டதாக கிரேண்ட் மாஸ்டரும் மலேசியா ஒக்கினாவா ஃபிரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் எஸ். விஜய் கூறினார்.
அமான் ஜெயா கராத்தே பயிற்சி மையத்தின் உரிமையாளர் மாஸ்டர் டாக்டர் ராமன் தலைமையில் இந்த பட்டயம் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றதாக அவர் சொன்னார்.

இந்த பயிற்சி மையத்தில் அதிகமான மாணவர்கள் கராத்தே பயிற்சியை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
சுங்கை பட்டாணி மற்றும் அமான் ஜெயா வட்டாரங்களில் வசிக்கும் மாணவர்கள் கராத்தே பயிற்சியை பெற 0124213704 என்ற கைத்தொலைபேசியில் டாக்டர் ராமனை தொடர்பு கொள்ளலாம்.


