
எதிர்வரும் பிகேஆர் தலைமைத்துவ தேர்தலில் கட்சியின் மகளிர் உச்ச மன்ற பதவிக்கு கேரன் கஸ்தூரி போட்டியிடுகிறார்.
எதிர்வரும் 2025-2028 தவணை காலத்திற்கு போட்டியிடும் தாம் மலேசியாவில் அனைத்து மகளிர் மற்றும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பதவிக்கு தாம் போட்டியிடுவதாக கேரன் கஸ்தூரி கூறினார்.
அடிப்படை நிலையில் உள்ள பெண்களின் ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பை கட்சியின் மகளிர் தலைமைத்துவத்திற்கு கொண்டு செல்வதே தமது பிரதான நோக்கம் என்றார் அவர்.
மகளிரின் பொருளாதார வலிமை மற்றும் ஆற்றலை முன்னெடுத்துச் செல்ல தாம் உறுதுணையாக இருக்கப் போவதாக அவர் சொன்னார்.
அனைத்து துறைகளிலும் இந்நாட்டிலுள்ள பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே தமது பிரதான நோக்கம் என்றார் அவர்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நலம் போன்ற அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு ஈடாக பெண்கள் சிறந்து விளங்க தம்மால் இயன்ற உதவிகளை தாம் செய்யப் போவதாக அவர் உறுதியளித்தார்.
பி40, மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த குடிமக்களை சேர்ந்த மகளிருக்கு மடானி அரசாங்கம் வழங்கி வரும் சலுகைகளை பெற அனைத்து உதவிகளையும் தாம் செய்யப் போவதாக அவர் உறுதியளித்தார்.
இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு மடானி அரசாங்கம்வழங்கும் சலுகைகள் என்ன என்பதை மகளிருக்கு கொண்டு செல்வதே தமது பிரதான நோக்கம் என்றார் அவர்.
இதுவரை தாம் வழங்கி வந்துள்ள சேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தேர்தலில் தாம் களம் இறங்கி உள்ளதாக கேரன் கஸ்தூரி தெரிவித்தார்.


