
எதிர்வரும் பிகேஆர் தலைமைத்துவ தேர்தலில் கட்சியின் உச்ச மன்ற பதவிக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி போட்டியிடுகிறார்.
கட்சி மற்றும் மக்களுக்கு தொடர்ந்து ஆக்ககரமான சேவைகளை வழங்க தாம் கட்சியின் உச்ச மன்ற பதவிக்கு போட்டியிடுவதாக பிகேஆர் உதவித் தலைவருமான சரஸ்வதி கூறினார்.
வரும் காலத்தில் கட்சி தொடர்ந்து வலிமையுடன் இருக்கவும் மக்களை முன்னெடுத்துச் செல்லும் கட்சியாக இந்த கட்சி விளங்கவும் இந்த களத்தில் தாம் குதித்துள்ளதாக அவர் சொன்னார்.
மக்களின் எதிர்காலக் கட்சி என்ற நிலையில் இந்த கட்சியை வலுப்படுத்த தாம் உறுதிக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை கட்சிக்கு மற்றும் மக்களுக்கு கட்சியின் உதவி தலைவர் மற்றும் துணையமைச்சர் என்ற நிலையில் தாம் ஆற்றிய சேவைகளை அடிபடையாக கொண்டு உச்ச மன்ற பதவிக்கு தாம் போட்டியிடுவதாக அவர் சொன்னார்.
கடந்த 3 ஆண்டுகளாக ஒரு துணையமைச்சர் என்ற நிலையில் கட்சி உறுப்பினர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை தாம் வழங்கி வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் தமது சேவைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சி உறுப்பினர்கள் பிகேஆர் மத்திய செலவைக்கு தம்மை தேர்வு செய்வார்கள் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஒரு முன்னணி வழக்கறிஞருமான சரஸ்வதி கூறினார்.


