Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெற்ற சரவணன் எனக்கு வெ 5,000 உதவித்தொகை!

தற்போது நோய்வாய்ப்பட்டிருக்கும் 1998 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் மலேசியாவிற்கு தங்கத்தை பெற்று பெருமை சேர்த்த ஜி. சரவணனுக்கு வெ 5,000 உதவித்தொகை வழங்கப்பட்டது.
கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் புலேந்திரன் சங்கத்தின் சார்பில் இந்த உதவித்தொகைக்கான காசோலையை சரவணனிடம் வழங்கினார்.
நாட்டின் விளையாட்டு துறைக்கு சரவணன் பங்கு அளப்பரியது என டத்தோஸ்ரீ புலேந்திரன் கூறினார்.
1998 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடந்த காமன்வெல் போட்டியில் சரவணனின் சாதனையை மலேசியர்கள் மறக்கவில்லை என அவர் சொன்னார்.
குறிப்பாக இந்நாட்டில் இந்தியர்கள் விளையாட்டு துறையில் கால் பதித்து வருவதாக அவர் பெறுமிதம் கொண்டார்.
இந்நாட்டில் விளையாட்டு துறையில் இந்தியர்களின் பங்கு அளப்பரியது என்றார் அவர்.
இந்நாட்டிலுள்ள
இந்திய இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular