
மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய மாணவர்களுடன் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி சந்திப்பு நடத்தினார்.
கல்வி மட்டுமின்றி சமூக மேம்பாடு, ஒற்றுமை, கல்வி ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும் சமூக நலன் போன்ற துறைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக சரஸ்வதி கூறினார்.

இத்திட்டங்களை வெற்றியடை செய்ய இந்த மாணவர்கள் காட்டிய ஆர்வம் குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.
கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் இந்த மாணவர்கள் சிறந்து விளங்க தாம் வாழ்த்துவதாக அவர் சொன்னார்.


