
ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் கு. ராஜசேகரனின் தாயார் மரணத்திற்கு சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.
நேற்று பந்திங், தாமான் முஹிபாவில் ராஜசேகரனின் தாயார் வீட்டிற்கு நேரில் சென்று குணா தமது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.
இந்த காலகட்டத்தில் ராஜசேகரன் தமது குடும்பத்தாருடன் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.

இது ஒரு மாபெரும் இழப்பு என்பதால் ராஜசேகரன் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் நேரில் சென்று ராஜசேகரன் குடும்பத்திற்கு தமது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.
ராஜசேகரன் தாயாரின் இறுதி சடங்கில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சி குழு உறுப்பினரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ஜே. அருள் குமார் நேரில் சென்று கலந்து கொண்டார்.


