Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

எனது வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி

பிகேஆர் ஜெம்புல் தொகுதி தலைவர் பதவிக்கு தமது வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் தாம் நன்றி கூறுவதாக பிகேஆர் ஜெம்புல் தொகுதி தலைவர் மணிவண்ணன் கோவின் கூறினார்.
ஒரு அணியாக இருந்து செயல்பட்டது தான் தமது இந்த வெற்றிக்கு காரணம் என பிகேஆர் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வாரின் அலுவலக அரசியல் செயலாளருமான அவர் சொன்னார்.
‘இது எனது வெற்றி மட்டுமல்ல, நமது அணியினரின் வெற்றி’ என்றார் அவர்.
இந்த கட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்களது முதிர்ச்சி மற்றும் வெளிப்படத் தன்மையை வெளிப்படுத்திய தமது அணியினரின் ஆற்றலை தாம் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக ஒரு அணியாக செயல்பட்டு, தமது வெற்றிக்கு வித்திட்ட இந்த அணி இல்லாவிட்டால், தாம் இன்றைய நிலைக்கு வந்திருக்க முடியாது என அவர் சுட்டிக் காட்டினார்.
‘எனது இந்த வெற்றி உங்கள் அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் என்பதில் சந்தேகம் இல்லை’ என்றார் அவர்.
ஜெம்புல் தொகுதி தலைவராக தமது இந்த வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் தாம் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த வெற்றி ஒரு தனிப்பட்ட நபரின் வெற்றி அல்ல, கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி இது என முன்னாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினருமான மணிவண்ணன் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular