
ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் இராமகிரு ஷ்ண மிஷன், ஸ்கூடாய் பேரவை மற்றும் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் இணைந்து நடத்திய வழிபாடே என் முதற்பணி என்ற கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரை ஆற்றிய ஜொகூர் மாநில மலேசிய இந்து சங்க தலைவர் ஸ்ரீ காசி சங்கரத்னா இராமகிருஷ்ணன் சமய மற்றும் அனைந்து இயக்கங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தலைமையுரை ஆற்றிய ஆலய செயலாளர் உயர்திரு பூபாலன் இவ்வாறான விழிப்புணர்வு கருத்தரங்கம் மதமாற்று பிரச்சனைகளை எதிர்த்துப் போராட வகை செய்யும் என்று கூறினார். நிகழ்வில் ஸ்கூடாய் பேரவைத் தலைவர் மோகனதாசு முனியாண்டி அருள் மொழி என்ற தலைப்பில் விவேகானந்தர் பொன் மொழிகளைத் தொகுத்து கவிதை வாசித்தார்.

தொடர்ந்து நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் சிங்கப்பூர் தலைவர் சுவாமி சம்பூஷ்யானந்தா ஆங்கிலத்திலும், மலேசிய தலைவர் சுவாமி சுப்ரியானந்தா தமிழிலும் சிறப்புரை ஆற்றினார். சுவாமி சுப்ரியானந்தா மலேசியாவில் இந்த இயக்கம் துவங்கி 25-ம் வெள்ளி விழா கொண்டாடும் இவ்வேளையில் மலேசிய இந்து சங்கமும், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயமும் எங்களோடு கைகோர்த்து இந்த நிகழ்வை படைப்பது சிறப்பாக அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் இணைந்து பணியாற்றி சமய மற்றும் சமுதாய நிகழ்வுகளை படைப்போம் ஜொகூர் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் இவ்வாறான சொற்பொழிவுகள் நடைபெறும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திரு அசோக் அவர்கள் அறிவிப்பாளராக பணியாற்றினார். நிகழ்வில் 150 பேர் கலந்து சிறப்பித்தனர். திருச்சிற்றம்பலம்.


