
மலேசிய தேசிய நூலகத்தின் ஹாரி ராயா பொது உபசரிப்பில் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
இந்த பொது உபசரிப்பில் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டது.
இது ஒருமைப்பாட்டின் உணர்வை பிரதிபலிப்பாக சரஸ்வதி கூறினார்.
பல மாநிலங்களின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்படுவது ஒரு புதிய அனுபவம் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் டிக் டாக் காணொளி போட்டி மற்றும் பாடல் இசைகள் இடம் பெற்றன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஹாஜி ருஜி, தேசிய காப்பகத்தின் தலைமை இயக்குனர் டத்தோ ஜாபார் சீடேக் , தேசிய ஒற்றுமை துறை அமைச்சரின் துணை தலைமை செயலாளர் முகமட் சோப்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


