
புவி தினத்தை முன்னிட்டு அண்மையில் ஒரு மலேசிய இளைய தொண்டர்கள் குழுவினர் கடற்கரை சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாட்டின் இயற்கை அழகை பாதுகாக்கும் பணியாக இங்குள்ள லோங் பீச்(Pasir Panjang) கடற்கரையை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
உலக அளவில் புவி தினம் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
நமது கிரகத்தை தூய்மை கேடு மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் அவசியம் குறித்து நினைவுறுத்தவே இந்த புவி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் கடற்கரையை சுத்தம் செய்வது ஒரு அர்த்தமுள்ள பணியாகும்.
குறிப்பாக இளைஞர்கள் புவியின் ஆண் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கடற்கரை சுத்திகரிப்பு பணிக்கு HWPL மலேசியா இயக்கம் முக்கிய பங்காற்றியது.
இந்த இயக்கம் இளைய தொண்டர்களை ஒன்று சேர்த்து கடற்கரை சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டது.
லோங் பீச் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் போட்டல்கள், உணவு பைகள், காகிதங்கள் ஆகியவற்றை அகற்றி அந்த கடற்கரையை சுத்தம் செய்தனர்.
‘மலேசியாவில் உள்ள கடற்கரைகள் பொக்கிஷங்களாக கருதப்படுகிறது. இதனை பாதுகாப்பது நமது கடமையாகும்’ என HWPL மலேசியா பிரதிநிதி ஒருவர் கூறினார்.
இது போன்று நடவடிக்கைகள் நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
இது போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் என அவர் சொன்னார்.
இதனிடையே அதிகமானோர் லோங் பீச் கடற்கரைக்கு வந்து போகின்றனர். ஆனால் அங்கு குப்பைகள், பிளாஸ்டிக் போட்டல்கள் போன்றவை தான் காண முடிகின்றது என லோங் பீச் கடற்கரையின் நிர்வாகி முகமட் நாசிப் கூறினார்.
இங்கு குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதிகமான வருகை புரிவதால் அது போதவில்லை இரு அவர் தெரிவித்தார்.
ஆகையால் இந்த கடற்கரையை சுத்தம் செய்ய அதிகமான தொண்டூழிய இயக்கங்கள் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
HWPL ஒரு அனைத்துலக அரசு சார்பற்ற இயக்கமாகும்.
கலந்துரையாடல், கல்வி மற்றும் தொண்டூழியம் வழி அமைதியை வளர்ப்பதில் இந்த இயக்கம் கவனம் செலுத்தி வருகிறது.
ஊடக விசாரணை அல்லது கூட்டு பங்காணமைக்கு hwplmalaysia@gmail.com தொடர்பு கொள்ளலாம்.


