
நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் இதுவரை வெ 99 மில்லியன் சமூகநல உதவித்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ஒதுக்கீட்டினால் 33,971 வசதி குறைந்தவர்கள் பயனடைந்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் கூறினார்.
இன்று மாநில சட்டமன்ற கூட்டத்தில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வகையான உதவித்தொகை எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மந்திரி பெசாரிடம் குணா கேள்வி எழுப்பினார்.
சமூக நலன், கல்வி, வீடமைப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றிற்கு எத்தனை பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது என அவர் மேலும் வினவினார்.
இதனிடையே கடந்த 2018 ல் மாநிலத்தில் 5,441 பேருக்கு வெ 13.161 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமிருடின் கூறினார்.

கடந்த 2019ல் 4,854 பேருக்கு 11.53 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
2020ல் 4,864 பேருக்கு வெ 12.45 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
2021ல் 4,724 பேருக்கு வெ 15.75 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2023ல் 4,543 பேருக்கு வெ 15.521 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேவேளையில் கடந்த 2024ல் 4,535 பேருக்கு வெ 14.872 மில்லியன் வழங்கப்பட்டதாக அமிருடின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.


