
இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜூனியர் கலை மற்றும் கலாச்சார பாராட்டு விருது 2025 இங்குள்ள கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த விருது நிகழ்ச்சியை கிந்தா இந்திய கலை ஆர்வலர்கள் சங்கம் மற்றும் மலேசிய இந்து சங்க கோப்பெங் வட்டார பேரவை இணைந்து நடத்தவிருக்கிறது.
எதிர்வரும் ஏப் 27 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் என மலேசிய இந்து சங்க கோப்பெங் வட்டார பேரவையின் தலைவர் விவேக ரத்னா சரஸ்வதி கூறினார்.

இந்த ஜூனியர் விருது 11 பிரிவுகளாக நடைபெறும். இதில் மொத்தம் 186 மாணவர்கள் பங்கு பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
பள்ளிக்கு புறப்பாட நிகழ்ச்சிகளான பாரதம், தேவாரம், பஜனை, சிலம்பம், சங்கீதம், கபடி, தப்பு மேளம், நாட்டியம், கராத்தே,தேக்குவாண்டோ ஆகியவற்றில் மாணவர்கள் தங்களின் திறமைகளை இந்த மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த மாணவர்களை பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் தேசிய அளவில் பல துறைகளில் தங்களின் திறமையை வெளிப்படுத்திய 4 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்படுவதாக சரஸ்வதி குறிப்பிட்டார்.


