
தினசரி வாசிக்கும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க இந்த வாசிக்கும் கலாச்சாரம் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு வாருங்கள் 10 நிமிடம் வாசிக்கலாம் நிகழ்ச்சி கலந்து கொண்ட பிறகு அவர் கருத்துரைத்தார்.

தினமும் வாசிப்பதால் கல்வி ஆற்றலை பெருக்கிக் கொள்ள முடியும் என அவர் சொன்னார்.
ஒவ்வொரு நாளும் குறிப்பாக சிறார்கள் பத்து நிமிடம் வாசிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தினமும் வாசிப்பதால் சிறார்களுக்கிடையே படிக்கும் ஆற்றல் அதிகரிக்கும் என இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தேசிய நூலக தலைமை இயக்குனர் எடி இர்வான் தொடக்கி வைத்தார்.
தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் இந்த நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.


