
சுபாங் ஏப் 21
முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான பாத்தேக் ஏர் எதிர் வரும் 12 ஜூலை 2025 முதல் கோலாலம்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு நேரடி விமான சேவையை தொடங்கவிருக்கிறது.
இந்த மைல்கல் மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவையை மேலும் வலுப்படுத்துகிறது.
ஆஸ்திரேலியாவில் தமது கால் பதிப்பை இந்த புதிய சேவை மேலும் வலுப்படுத்துகிறது.
மெல்போர்ன் நகருக்கு வாரத்திற்கு நான்கு முறை பாத்தேக் ஏர் சிறகடிக்க விருக்கிறது.
இந்த புதிய சேவை வர்த்தக மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்குகிறது.
இதனிடையே பாத்தேக் ஏர் ஆஸ்திரேலியாவில் வியூக கவனத்தை செலுத்தி வருவதாக இந்த விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
மேலும் இந்த விரிவாக்கம் மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையே விமான போக்குவரத்து தொடர்பை வலுப்படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கலாச்சார அம்சங்களை கொண்ட நகரான மெல்போர்னுக்கு பயணிகள் நேரடி மற்றும் சொகுசான பயணத்தை மேற்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முதல் முறையாக கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் கோலாலம்பூர்-மெல்பர்ன் விமான சேவையை பாத்தேக் ஏர் அறிமுகம் செய்தது. இந்த சேவைக்கு போயிங் 737 ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. பிறகு 2023 டிசம்பரில் விடுமுறை கால உச்சத்தின் போது இந்த சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்பொழுது ஏர்பஸ் A330 ரக விமானம் பயன்படுத்தப்பட்டது.

இந்த பருவகால பயணங்களின் பாத்தேக் ஏரின் ஆற்றல் குறிப்பிடும் வகையில் வளர்ச்சி கண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பயண தேவையும் அதிகரிப்பு கண்டுள்ளது.2020-ல் 50 விழுக்காடாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை அளவு 2025-இன் தொடக்கத்தில் 65 விழுக்காடாக அதிகரிப்பு கண்டதாக அவர் தெரிவித்தார்.
பாத்தேக் ஏரின் சேவையில் மெல்போர்ன் பயணிகள் பயணிக்கும் நகரங்களில் இது மிகவும் தேர்வு செய்யப்படும் ஒரு நகரமாகும்.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2,729,545 பயணிகள் மெல்போர்ன் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களில் 930,356 பேர் அனைத்துலக பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாச்சார தலைநகரான மெல்போர்ன் இயக்க அழகை கொண்ட ஒரு நகரமாகும்.
உலக தரம் வாய்ந்த உணவுகள், காப்பி போன்ற பானங்கள் நகரில் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்நகரில் ஒவ்வொரு பயணியும் மறக்க முடியாத அனுபவத்தை பெறலாம் என்பதில் சந்தேகமில்ல.
இந்த சேவைக்கு பாத்தேக் ஏர் A330 ரக விமானத்தை பயன்படுத்துகிறது. இந்த விமானத்தில் 12 பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் 365 எக்கோனமி கிளாஸ் இருக்கையில் உள்ளன. பயணிகள் சொகுசாக பயணிக்க அனைத்து வசதிகளும் இந்த விமானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நேரடி விமான சேவையுடன் கூடுதலாக பாலி வழி மெல்போர்ன் நகருக்கு தினசரி நேரடி சேவையை பாத்தேக் ஏர் மேற்கொண்டு வருகிறது.
கோலாலம்பூர்-மெல்பர்ன் நகரை இணைப்பதில் பயணிகளுக்கு கூடுதல் தேர்வு பாத்தேக் ஏர் வழங்குகிறது.
பயணிகள் தங்களின் அடுத்த பயணத்தை திட்டமிட பாத்தேக் ஏர் கைத்தொலைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது www.batikair.com இணையத்தை வலம் வரலாம்.


