Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கூலாய் மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான கடைகள் அதிகரித்து வருகிறது!

கூலாய் மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான கடைகள் அதிகரித்து வருவது அச்சத்தை தருவதாக மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ்பி பிரேம் கூறினார்.
லைசென்ஸ் இல்லாமல் இயங்கி வரும் இந்த மதுபான விற்பனை குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த கடைகளில் விற்கப்படும் மலிவான சாராயம் அருந்துவதால் இந்திய இளைஞர்களின் உடல் நலம் தான் பாதிக்கும் என அவர் கவலை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசு மலேசிய போலீஸ் படை, நகரான்மை கழகம் மற்றும் சுங்கத்துறை அலட்சியம் காட்டி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இத்தரப்பினரின் அனுமதி இல்லாமல் தான் குறிப்பாக கூலாய் மாவட்டத்தில் அதிகமான கடைகள் செயல்பட்டு வருவதாக அவர் அறிவித்தார்.
கூலாய் மாவட்டத்தில் மட்டுமின்றி ஜொகூர் மாநிலத்திலும் இந்த சட்ட விரோத மதுபான கடைகள் அதிகரித்து வருவதாக அவர் சொன்னார்.
இந்த விவகாரத்தில் அதிகமாக பாதிக்கப்படுவது இந்திய சமூகமே என அவர் தெரிவித்தார்.
இந்த சட்ட விரோத மதுபான விற்பனையை குறிப்பாக அரச மலேசிய போலீஸ் படை தடுத்து நிறுத்த வேண்டும்.
அதே வேளையில் லைசென்ஸ் இல்லாமல் செயல்படும் இந்த கடைகளை நகரான்மை கழகம் இழுத்து மூட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதுபோன்ற சட்ட விரோத மது விற்பனை அதிகரித்தால், குறிப்பாக நமது இந்திய இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக அவர் அச்சம் தெரிவித்தார்.
ஆகையால் நகராண்மைக் கழகம், அரச மலேசிய போலீஸ் படை மற்றும் சுங்கத்துறை இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என டாக்டர் பிரேம் கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular