
மறைந்து துன் அப்துல்லாஹ் படாவியின் உடல் இன்று தேசிய பள்ளிவாசலில் உள்ள மாவீரர் கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.
துன் படாவியின் மருமகனும் பிரபல அரசியல் தலைவருமான கைரி ஜமாலுடின் இதனை உறுதிப்படுத்தினார்.
ஐந்தாவது பிரதமரான மறைந்த துன் அப்துல்லாஹ் படாவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் பொதுமக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேசிய பள்ளிவாசலில் அஞ்சலி செலுத்தலாம்.
அவரை அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேசிய பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகைக்குப் பிறகு பிரதான பிரார்த்தனை மண்டபத்தில் இறுதி மரியாதை செலுத்தப்படும்.
பாக் லாவுக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்பும் எவரும் தேசிய பள்ளிவாசலுக்கு வரலாம். முஸ்லிம் அல்லாதவர்கள், பள்ளிவாசலுக்கு வரலாம். அதில் தடை ஏதும் இல்லை. அவர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்து வர வேண்டும்.
நண்பகலுக்குப் பிறகு, பாக் லாவுக்கு இறுதித் தொழுகையும் பிரார்த்தனையும் நடைபெறும். அதன் பிறகு அவர் தேசிய பள்ளிவாசலில் உள்ள மாவீரர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவார்.
நேற்று இரவு தேசிய இதய நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கைரி ஜமாலுடின் இதனை அறிவித்தார்.


