
நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா படாவி தமது 85 வயதில் காலமானார்.
மலேசியாவின் ‘மனித மூல தன மேற்பாடு தந்தை’ என பெருமையுடன் அழைக்கப்பட்டு வந்த துன் படாவி, நான்காவது பிரதமர் துன் மகாதீரின் பதிவு ஓய்வுக்கு பிறகு பிரதமராக பதவியேற்றார்.
அண்மைய ஆண்டுகளாக உடல் நலக் குறைவாக அவர் இருந்து வந்தார்.
இன்று மாலை 7.10-க்கு தேசிய இருதய மையத்தில் (ஐஜேஎன்) படாவி காலமானதாக அவரின் மருமகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடின் உறுதிப்படுத்தினார்.
மிகவும் மென்மையுடன் பேசும் ‘Mr Clean’ என அழைக்கப்படும் இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் அபார வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவரின் ஆட்சியின்போது தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததோடு ஐந்து மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தையும் இழந்து.
தேசிய முன்னணி அமைச்சரவையில் பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை இவர் வகித்து வந்தார்.


