
ஜொகூர் பாரு ஏப் 14
அதிகமான இந்தியர்கள் வாழும் கூலாய் மாவட்டத்தில் இந்தியர்களுக்கேன ஒரு மின் சுடலை கட்டப்படாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு சம்பவம் என மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் எஸ்பி பிரேம் கூறினார்.
இந்த மாவட்டத்தில் இந்தியர்களுக்கு என ஒரு மின்சுழலை கட்டப்படாமல் இருப்பது தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் ஆட்சியின் போது இந்த மாவட்டத்தில் இந்தியர்களுக்கு மின் சுடலை கட்ட வெ 20 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆனால் பொறுப்பற்ற தரப்பினரின் ஈடுபாட்டினால் அங்கு மின் சுடலை கட்டப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
அப்பொழுது எதிர் கட்சியாக இருந்த பிகேஆரின் ஒரு இந்திய தலைவர் இந்த மின் சுடலை கட்டுமானத்திற்கு பெரும் தடையாக இருந்து வந்ததாக அவர் சொன்னார்.
அந்த தலைவர் தமது நண்பர்களுடன் இணைந்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்து மயானத்தில் ஒரு பகுதி நிலத்தில் மின் சுடலையை கட்ட ஜொகூர் மஇகா முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இருப்பினும் அந்த முயற்சிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் போய்விட்டது.
அந்த முயற்சியை மஇகா கைவிட்டதை தொடர்ந்து, நஜீப் ஒதுக்கீடு செய்த மான்யமும் கை மாறி விட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பிகேஆர் கட்சியின் புக்கிட் பாத்து சட்டமன்ற உறுப்பினர் பலமுறை மாநில சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பி வந்ததாக அவர் தெரிவித்தார்.
தற்போது தேசிய முன்னணி மற்றும் பாக்காத்தான் ஹராப்பன் இணைந்து மாநில அரசாங்கத்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜொகூர் மாநில அரசாங்கம் கூலாய் மாவட்டத்தில் இந்தியர்களுக்கென ஒரு மின் சுடலையை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
மாநில அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் ராவின் குமார் இந்த விவகாரத்தில் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மடானி அரசாங்கம் இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


