Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பணி ஓய்வுக்கு மலேசியா சொர்க்கமா? குறைந்த செலவு, சிறந்த மருத்துவம் உண்மையா அல்லது வெளிநாட்டு மாயையா?

பணி ஓய்வு பெறுவதற்கு ஏற்ற சிறந்த நாடுகளின் பட்டியலில் மலேசியா ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது ஒருபுறம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், தாய்லாந்து மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதல் 10 இடங்களுக்குள் மலேசியா வந்துள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது.

உலகளாவிய பணி ஓய்வு குறியீட்டின்படி மலேசியா சிறந்த இடமாக கூறப்பட்டாலும், இங்குள்ள வாழ்க்கைச் செலவு உண்மையில் குறைவா? சுகாதாரக் கட்டமைப்பு அவ்வளவு சிறந்ததா? சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கருத்துக்கள் மட்டும் போதுமா? என்ற விவாதங்கள் எழுகின்றன.

கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை RM1,500 முதல் RM2,500 வரை இருக்கலாம். உள்ளூர் உணவகங்களில் உணவு 10 ரிங்கிட்டிற்கு குறைவாக இருக்கலாம். ஆனால், இது ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவை தீர்மானிக்குமா? ஓய்வுக் காலத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகள், இதர தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் இந்த முடிவுக்கு வருவது சரியா?

பனாமா முதலிடத்திலும், போர்த்துகல் மற்றும் கோஸ்டாரிகா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ள நிலையில், மலேசியா ஏழாவது இடத்தில் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. உண்மையில், இந்த தரவரிசை எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது? இது வெளிநாட்டினருக்கான விளம்பரமா அல்லது உண்மையான நிலவரமா? என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular