
தனது விஸ்தரிப்பை வலுப்படுத்தும் வகையில் 2025 ஆம் ஆண்டில் 30 புதிய நகர்களுக்கு சிறகடிக்க ஏர் ஆசியா திட்டம் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் முழுமையாக மீட்சி பெற்றது தொடர்ந்து ஆசியான் மற்றும் உள்நாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நபர்களுக்கு விமான சேவையை மேற்கொள்ள ஏர் ஆசியா இலக்கை கொண்டுள்ளது.
அதிக தேவை நாடுகளான இந்தியா, சீனா உட்பட ஆசியானில் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தனது விமான சேவையை மேலும் விஸ்தரிக்க உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா திட்டமிட்டு வருகிறது.
இந்த புதிய நகரங்களுக்கான விமான சேவைகளின் ஏற்பாடுகள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் கால் ஆண்டில் முடிவடையும்.
அண்மையில் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கான விமான சேவையை ஏர் ஆசியா மலேசியா அறிவித்துள்ளது.
27 ஜூன் 2025 முதல் வாரத்திற்கு நான்கு முறை டார்வின் நகருக்கு ஏர் ஆசியா விமான சேவையை மேற்கொள்ளவிருக்கிறது.
இதனிடையே 2025-ல் ஏர் ஆசியா முழுமையான நிலைக்கு திரும்பும் என ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.
விமான பயண சேவை தேவையின் அதிகரிப்பை தொடர்ந்து இவ்வாண்டில் மேலும் 30 புதிய நபர்களுக்கு சிறகடிக்க ஏர் ஆசியா திட்டம் கண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில் 2025-ல் 14 புதிய விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தடையும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த ஆண்டில் தனது இன்னும் பல விமான தளங்களை விரிவாக்க ஏர் ஆசியா திட்டம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


