
கோலாலம்பூர் மார்ச் 28
அண்மையில் திரெங்கானு மந்திரி பெசார் அமாட் சம்சுரி மொக்தாரை பதவி விலக கூறி தொங்க விடப்பட்டுள்ள பதாகைகள் வெளி ஆட்களின் சதிநாச வேலை என திரெங்கானு பாஸ் ஆதரவு பேரவையின் தலைவர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த விவகாரத்தில் பாஸ் கட்சியின் உறுப்பினர்கள் சம்பந்தப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
இது போன்ற ‘சதிநாச” வேலைகளில் பாஸ் உறுப்பினர்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் என திரெங்கானு மந்திரி பெசாரின் முஸ்லிம் அல்லாத விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியமான அவர் சொன்னார்.
நீதி மற்றும் உண்மை அடிப்படையிலான போராட்டங்களை ச பாஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
மாநில அரசாங்கம் தலைமைத்துவத்தின் மீது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்த வெளி ஆட்கள் இந்த தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சம்சுரி தலைமையிலான மாநில அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பொறுப்பற்ற தரப்பினரின் இந்த செயலை மாநில மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என அவர் தெளிவுபடுத்தினார்.
மத்திய மற்றும் மாநில அளவிலான பாஸ் தலைமைத்துவம் சம்சுரியுடன் இந்த பிரச்சனையும் எதிர்நோக்கு வில்லை என கடந்த திங்கட்கிழமை பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறியிருந்தார்.


