
மஇகா தம்போய் கிளையின் 58-வது ஆண்டு பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
இந்த ஆண்டு பொதுக்கூட்டம் ஜொகூர் பாரு,லார்க்கின் ஜெயா சிவன் கோயிலில் நடை பெற்றது.
இந்த ஆண்டு பொதுக்கூட்டத்தை மஇகா இஸ்காந்தார் புத்ரி தொகுதி தலைவர் சங்கர பாண்டியன் வழிநடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மஇகா பூலாய் தொகுதி தலைவர் பன்னீர், ஜொகூர் பாரு மஇகா துணைத் தலைவர் கேசவன், பூலாய் தொகுதியின் செயலாளர் லலிதா, மஇகா பூலாய் தொகுதியின் மகளிர் அணி தலைவி திவ்யா, தாமான் டாலியா கிளையின் தலைவர் கனகா, தாமான் கெமாஸ் கிளைத் தலைவர் சிவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இவ்வாண்டில் தம்போய் கிளையின் நடவடிக்கை திட்டங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது. கிளையின் கணக்கறிக்கைகளும் நிறைவேற்றப்பட்டது.



