
புத்ரா ஜெயா மார்ச் 24
நாட்டில் நிலப் பிரச்சனைகளை எதிர் நோக்கி வரும் ஆலயங்களின் புள்ளி விவரங்களை சேகரித்து அதற்கு தீர்வு காண ஒரு குழு அமைக்கப்படும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
அண்மையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த 30 நவம்பர் 2024-ல் நடைபெற்ற இந்து வழிபாட்டு தளங்கள் மீதான ஆலய கருத்தரங்கில் இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் ஆதரவில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் 700க்கும் மேற்பட்ட ஆலய பிரதிநிதிகள் மற்றும் இந்து மத அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களிலும் நில மற்றும் நிர்வாக பிரச்சனைகளை எதிர்நோக்கி வரும் ஆலயங்களின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என இந்த மாநாட்டில் விரிவாக பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்கத்தின் வழி இந்த க் குழுவை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமூகங்களுக்கிடையே பதற்றத்தை தவிர்க்க சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இப்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என இந்த கருத்தரங்கில் விரிவாக பேசப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த ஆலய கருத்தரங்கில் இந்து ஆலயங்களை பாதுகாப்பது குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி வரும் நிலப்பிரச்சனைகள் மற்றும் நிர்வாக பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த கருத்தரங்கில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பிறகு 8 தீர்மானங்களாக கொண்டுவரப்பட்டது.
இந்த கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்ட இறுதி அறிக்கை கடந்த 12 மார்ச் 2025-ல் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த பிரதமர் இலாகாவின் கீழ் செயல்படும் மித்ராவின் நிதியை பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளதாக அவர் சொன்னார்.
அனைத்து மாநிலங்களிலுவரும்நிலப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் ஆலயங்களில் புள்ளி விவரங்களை சேர்க்க வேண்டும் என்பதே இந்த கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானமாகும்.
ஒவ்வொரு முறையும் ஒரு ஆலயத்தின் நிலப்பிரச்சனை உருவெடுக்கும் பொழுது, பல்லின சமூகங்களுக்கு இடையே பதற்ற நிலை ஏற்படுகிறது என்றார் அவர்.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே இந்த தீர்மானம் கவனமாக நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த தீர்மானங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த தீர்மானங்களை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என செனட்டர் சரஸ்வதி குறிப்பிட்டார்.


