
ஜொகூர் பாரு மார்ச் 9
‘இந்துக்களின் புனித வார்த்தையான ‘வேல் வேல்’ என்ற சொல்லை மது போதை மற்றும் பேய் ஓட்டத்தை ஒப்பிட்டு பேசியுள்ள இஸ்லாமிய மத போதகர் ஜம்ரி வினோத்திற்கு எதிராக இங்குள்ள பாண்டார் ஸ்ரீ அலாம் காவல் நிலையத்தில் போலீஸ் புகார் செய்யப்பட்டது.
தமது முகநூலில் இந்து மதத்தை பற்றி ஜம்ரி வினோத் தரம் குறைவாக பேசியுள்ளதாக ஜொகூர் மஇகா தகவல் பிரிவு தலைவரும் தாமான் கெம்பாஸ் பாரு கிளைத்தலைவருமான காந்தவேல் சாமிவேல் தமது போலீஸ் புகாரில் கூறினார்.
இந்துக்களின் சமய வழிபாடுகளை ஜம்ரி வினோத் கேவலப்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
பல இனங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்நாட்டில், ஜம்ரி வினோத் அந்த ஒற்றுமையை பிளவுபடுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்த சர்ச்சைக்குரிய நபரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த போலீஸ் படை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த போலீஸ் புகாரில் ஜொகூர் மஇகா இளைஞர் பிரிவின் சட்டப்பிரிவு தலைவர் நக்கீரன் குமார் காந்த வேல், ஜொகூர் மஇகா சமயப் பிரிவு தலைவர் கே. சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


