
இங்கு நடைபெற்ற ரிதம் மற்றும் ராகா இசை நிகழ்ச்சி உள்ளூர் பாடகர்களுக்கு மற்றும் வரும் கால கலைஞர்களுக்கும் ஒரு தூண்டுதலாக அமைந்துள்ளதாக பாக்காத்தான் ஹராப்பன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் கூறினார்.
மெஸ்ட்ரோ நிறுவனம் படைத்த இந்த இசை நிகழ்ச்சி உள்ளூர் பாடகர்களுக்கு திறன்களை பாராட்டுவதாக அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.
திறன் படைத்த இளைய பாடகர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த இந்த நிகழ்ச்சி ஒரு பாலமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மெஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைவர் முருகன் வெற்றிகரமாக இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற குணா வெ 1,000 வழங்கினார்.
மேலும் இந்த இசை நிகழ்ச்சியின் போது மேடையில் தோன்றிய ஒவ்வொரு மாணவருக்கும் தலா வெ 50 அவர் வழங்கினார்.
இசை உலகில் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்த இந்த மாணவர்களுக்கு இந்த சிறிய தொகையை தாம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
நமது மாணவர்கள் இதர துறைகளில் தங்களின் திறமையை வெளிப்படுத்துவது போல் இசைத்துறையிலும் தங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


