Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

காவடி ஆட்டத்தை கேவலப்படுத்திய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை

கோலாலம்பூர் மார்ச் 5
இந்துக்களின் புனித காவடி ஆட்டத்தை சமூக வலைதளத்தில் கேவலப்படுத்திய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் இலாக்கா
( சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் வலியுறுத்தினார்.
இது முற்றிலும் ஒரு அருவருப்பான செயலாகும். இதர இனத்தவரின் சமய நம்பிக்கையை சமூக வலைத்தளத்தில் இப்படி கேவலப்படுத்திய சம்பவம் வேதனை அளிக்கிறது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
அஸ்ட்ரோ ரேடியாவின் ஏரா எப்எம் காணொளி ஒரு ஒரு பொறுப்பற்ற செயல் என்றார் அவர்.
முருக கடவுளுக்காக தங்களின் நேர்த்தி கடனை செலுத்த காவடி ஏந்தி பக்தர்கள் ‘வேல் வேல்’ என வேண்டுகின்றனர்.
ஆனால் அந்தக் காணொளியில் சம்பந்தப்பட்ட நபர்கள் ‘வேல் வேல்’ என கிண்டல் செய்து இந்து சமயத்தை இழிவு படுத்தி உள்ளதை போலீசார் கடுமையாக கருத வேண்டும் என அவர் சொன்னார்.
ஒரு பல்லின கலாச்சாரம் சமய நம்பிக்கை கொண்ட ஒரு நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது.
இந்த கேவலமான செயலுக்காக சம்பந்தப்பட்ட நபர்களை போலீஸ் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அவர் சொன்னார்.
மலேசியாவில் பிறர் இனத்தவரின் சமய நம்பிக்கையை கேவலப்படுத்தும் நபர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவடி ஆட்டத்தை கேவலப்படுத்திய சம்பந்தப்பட்ட நபர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை தாம் வரவேற்பதாக அவர் சொன்னார்.
ஆனால் இது மட்டும் போதாது. அந்த நபர்கள் மீது தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் அரச மலேசிய போலீஸ் படை குற்றவியல் விசாரணையை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு சமய நம்பிக்கையை கொண்ட மலேசியா ஒரு அழகான நாடாகும். இதற்கு பாதகத்தை ஏற்படுத்தும் நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என குலா தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular