
இந்துக்களின் சமய நம்பிக்கையான காவடி ஆட்டத்தை இழிவு படுத்தியுள்ள ஏரா எப்எம் வானொலி நிலைய ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாஸ் ஆதரவு பேரவை வலியுறுத்தியது.
சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ள ஏரா எப்எம் வானொலி ஊழியர்களின் செயல் மிகவும் கேவலமாக உள்ளது.
‘வேல் வேல்’ என கேலி செய்து இவர்கள் இந்துக்களின் நம்பிக்கையை சிறுமைப்படுத்தி உள்ளனர்.
பல நாட்கள் விரதம் இருந்து தைப்பூச தினத்தன்று முருகப்பெருமானுக்கு தங்களின் நேர்த்திக் கடனை செலுத்த இந்து பக்தர்கள் காவடி ஏந்தி ‘வேல் வேல்’ பக்தி பரவசத்துடன் முறையிடுகின்றனர்.
ஆனால் இந்த ஏரா எப்எம் வானொலி ஊழியர்கள் இந்து மதத்தை கேவலப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தை அரசாங்கம் கடுமையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த காணொளி வைரலாகியதை தொடர்ந்து இந்நாட்டில் உள்ள இந்துக்கள் மிகவும் ஆத்திரமும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
இதர மதத்தை சிறுமைப் படுத்துவதை இஸ்லாம் எதிர்க்கிறது. இந்த நிலையில் இந்த பொறுப்பற்ற நபர்களில் செயல்களால் மீண்டும் எதிர் தரப்பினர் இஸ்லாமை சாட வழி வகுக்கிறது.
இந்த சர்ச்சை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையீடு செய்தாரா என பாஸ் ஆதரவு பேரவை கேள்வி எழுப்பியது.


