
கோலாலம்பூர் மார்ச் 4
சமூக வலைத்தளத்தில் இந்துக்களின் காவடி ஆட்டத்தை இழிவு படுத்தியுள்ள தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் உதவி தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
தைப்பூச கொண்டாட்டத்தின் போது பக்தி மற்றும் ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டது தான் காவடி ஆட்டம்.
இந்த சமய சடங்கை இழிவு படுத்தும் தரப்பினருக்கு எதிராக போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பிறர் மதத்தை மற்றும் சமயத்தை கேலி செய்வது ஒரு பொறுப்பற்ற செயலாகும்.
இந்த தவறுகளை செய்யும் நபர்கள் தங்களின் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டால் மட்டும் போதாது.
இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது 3R சம்பந்தப்பட்ட விவகாரமாகும். இந்த விவகாரத்தில் போலீசார் கடுமையாக செயல்பட வேண்டும் என அவர் சொன்னார்.
பல இனங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட இன்னாற்றில், ஒருவர் மற்றொருவரின் மதம் மற்றும் சமயத்தை இழிவு படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏரா எப்எம் காணொளி மிகவும் கண்டிக்கத்தக்கது.
நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.
இதுபோன்று சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை நடப்ப அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என சஞ்சீவன் தெரிவித்தார்.


