
காவடி ஆட்டத்தை கேலி செய்யும் ஏரா எப்எம் காணொளியை தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கடுமையாக சாடினார்.
தைப்பூச கொண்டாட்டத்தின்போது நடைபெறும் காவடி ஆட்டம் இந்து சமய சடங்குகளில் ஒன்றாகும் என்றார் அவர்.
பக்தர்களுக்கு இது பக்தி மற்றும் ஆன்மீக நோக்கத்தை கொண்டது என அவர் சுட்டிக் காட்டினார்.
இதுபோன்ற சமய சடங்குகளை கேலி செய்யும் செயல் இதர சமயத்தை இழிவு படுத்துவதாக அவர் சொன்னார்.
பொதுமக்களின் அணுகுமுறைகளை வளர்க்க ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அதேவேளையில் மலேசியாவின் வளமான பல்லின கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் சொன்னார்.
புரிந்துணர் மற்றும் உள்ளடக்கத்தை வளர்க்க ஊடகங்களுக்கு தார்மீக கடமை உண்டு என அவர் தெரிவித்தார்.
புரிந்துணர்வு, மதித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய கொள்கையின் வழி தேசிய ஒற்றுமையை வளர்க்க தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
ஒருவர் மற்றொருவரின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை மதிக்க வேண்டும் என்பதை ஒருமைப்பாட்டு அமர்த்து வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இனம், மதம் மற்றும் அரச குடும்பம் சம்
சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் அவதூறு மற்றும் தூண்டுதலை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அண்மையில் நாடாளுமன்ற கூட்டத்தை தொடக்கி வைத்து மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்காந்தார் வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஏரா எப்எம் சம்பந்தப்பட்ட காணொளி குறித்து தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி பாட்சில் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையை தாம் பாராட்டுவதாக சரஸ்வதி தெரிவித்தார்.


