
சிம்பாங் ரெங்காம் பிப் 28
சிம்பாங் ரெங்காமில் வறுமைக் கோட்டில் உள்ள 18 இந்திய குடும்பங்களுக்கு ஜொகூர் மாநில மஇகா நிதி உதவி வழங்கியது.
இந்த நிதி உதவிக்கான காசோலையை ஜொகூர் மாநில மஇகா தலைவரும் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான ரவீன் குமார் வழங்கினார்.
இந்த நிதி உதவி சம்பந்தப்பட்ட குடும்பங்களின் சுமைகளை சற்று குறைக்கும் என ரவீன் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

வறுமைக் கோட்டில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு மாநில மஇகா தொடர்ந்து உதவிகளை வழங்கி வரும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில மஇகா துணைத் தலைவர் டத்தோ நிலா ராஜாவும் கலந்து கொண்டார்.


