Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நகர்ப்புற மறு சீரமைப்பு சட்டத்தை பாஸ் ஆதரவு பேரவை எதிர்க்கிறது!

கோலாலம்பூர் பிப் 21
அரசாங்கம் உத்தேசித்துள்ள நகர்புற மறு சீரமைப்பு சட்டத்தை பாஸ் ஆதரவு பேரவை எதிர்ப்பதாக அந்தப் பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த சட்டம் இந்நாட்டில் உள்ள மலாய் முஸ்லிம்களின் அதிகாரத்திற்கு பங்கத்தை விளைவிக்கும் என்றார் அவர்.
நகர்ப்புற மறுசீரமைப்பு சட்டம் மற்றும் இனப் பாகுபாடு எதிர்ப்பு சட்டம் மலாய்க்காரர்களின் சிறப்புரிமைக்கு எதிர்ப்பானது என அவர் சொன்னார்.
இந்த சட்டங்களை உடனடியாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கூட்டரசு சட்டத்தின் 153 பிரிவில் நீண்ட காலமாக மலாய்காரர்களின் சிறப்புரிமை வலியுறுத்தப்பட்டு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில் இன பாகுபாடு எதிர்ப்பு சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால் இந்து சமூகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர் சொன்னார்.
சிறுபான்மை பிரிவினரான இந்தியர்கள் சமூக பொருளாதார திட்டங்களில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என அவர் சொன்னார்.
இந்த புதிய சட்டம் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது என அவர் சொன்னார்.
மலேசியா மலாய் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட ஒரு நாடாகும்.எவ்வித இன பதற்றம் இன்றி அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இதனை சீர்குலைக்கும் வகையிலான புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular