Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலாக்காவில் பாஸ் ஆதரவு பேரவையின் மக்கள் சேவை மையம்

மலாக்கா பிப் 24
மலக்காவில் பாஸ் ஆதரவு பேரவையின் மக்கள் சேவை மையம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.
இந்நாட்டில் பாஸ் ஆதரவு பேரவையின் முதலாவது மக்கள் சேவை மையம் இதுவாகும்.
அனைத்து மலேசியர்களுக்கிடையே ஒற்றுமை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளதாக பாஸ் ஆதரவு பேரவையின் தேசியத் தலைவர் நா. பாலசுப்ரமணியம் கூறினார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இந்நாட்டில் உள்ள சமூகங்களை ஒன்றிணைக்க பாஸ் ஆதரவு பேரவை முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியை ஆதரித்து வரும் முஸ்லிம் அல்லாத சமூகங்களின் நலன்களைப் பேண பாஸ் ஆதரவு பேரவை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பாஸ் கட்சியின் இணை உறுப்பினராக சேர பாஸ் ஆதரவு பேரவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பாஸ் கட்சியுடன் இணைந்து இந்நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களின் நலங்களுக்காக பாஸ் ஆதரவு பேரவை தொடர்ந்து குரல் கொடுத்து வரும் என்றார் அவர்.
இதனிடையே இம் மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகங்கள் எதிர்நோக்கும் குறைகளை செவிமடுத்து அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மக்கள் சேவை மையம் அமைக்கப்பட்டதாக மலாக்க மாநில பாஸ் ஆதரவு பேரவையின் தலைவர் டாக்டர் சௌன் லோ செங் நியான் கூறினார்.
சமூகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய பாஸ் ஆதரவு பேரவையுடன் ஒன்றிணைந்து மலாக்கா பாஸ் ஆதரவு பேரவை செயல்படும் என அவர் சொன்னார்.
மலக்கா மாநில மக்கள் தாங்கள் எதிர் நோக்கம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த மக்கள் சேவை மையத்திற்கு வருகை புரியலாம் என அவர் தெரிவித்தார்.
இந்த மக்கள் சேவை மைய திறப்பு விழாவில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மலாக்கா மாநில பாஸ் தலைவர் ஹாஜி சுல்கிப்ளி, துணைத் தலைவர் ஹாஜி பாக்ரி ஜமாலுடின், பாஸ் ஆதரவு பேரவையின் தேசிய தலைவர் நா. பாலசுப்ரமணியம், பேரவையின் செயலாளர் ஹரிதரன், பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular