
சிங்கப்பூர் பிப் 20
இன்று பிப் 20 சிங்கப்பூர் சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசிய பிரஜையான பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் இறுதி நேரத்தில் ஊத்தி வைக்கப்பட்டது.
இறுதி நேரத்தில் சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைத்ததாக லிபர்டி வழக்கறிஞர்கள் ஆலோசகர் என். சுரேந்திரன் கூறினார்.
இந்த போதைப் பொருள் கடத்தல் விசாரணையில் இன்னும் 2 விவகாரங்கள் முடிவு செய்யப்படாமல் இருப்பதால், தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி வூ பீ லின் ஒத்தி வைத்துள்ளதாக சுரேந்திரன் பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
‘நாளை நிறைவேற்றப்படவிருந்த பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்’ என சுரேந்திரன் கூறினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குள் 51.84 கிராம் ஹேரோயின் கடத்தியதாக பன்னீர் செல்வத்தின் மீது சிங்கப்பூரில் குற்றச்சாட்டப்பட்டது.
இன்று பிப் 20 ஆம் தேதி நிறைவேற்றப்பட விருந்த பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனை விவகாரத்தில் தலையிடும்படி பல அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மை கேட்டுக்கொண்டனர்.


