
ஜொகூர் பாரு பிப் 20
ஜொகூர் மாநிலத்தில் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சுல்தானா ரோகாயா அறக்கட்டளை மற்றும் ஜொகூர் மாநில மஇகா உதவிகளை வழங்கியது.
இதன் வழி மௌன்ட் ஆஸ்டின் தமிழ் பள்ளி தலைமை ஆசிரியரிடம் 85 புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.
சுல்தானா ரோகாயா அறக்கட்டளை இயக்குனர் டத்தோ ராமன் வேலு, அதன் தலைமை நிர்வாகி அரவிந்தன் மற்றும் மஇகா தெப்ராவ் தொகுதி தலைவர் ஏ. மார்ட்டின் இந்த புத்தகப் பைகளை வழங்கினார்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த உதவியை வழங்கிய இவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


