
ஜொகூர் பாரு பிப் 20
புதிய ஆண்டிற்கான பள்ளி திறக்கப்பட்டது முன்னிட்டு ஜொகூர் மாநில முதலாம் ஆண்டு தமிழ் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டது.
ஜொகூர் மாநில தலைமை ஆசிரியர்கள் மன்றம் மற்றும் சுல்தானா ரோகாயா அறக்கட்டளை ஒத்துழைப்புடன் ஜொகூர் மஇகா இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்ச்சியில் ஜொகூர் மாநில மஇகா துணைத் தலைவர் டத்தோ நிலா ராஜா மற்றும் மஇகா பூலாய் தொகுதி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த புத்தகத்தை வழங்கப்படுவதால் பெற்றோர்களின் சுமை சற்று குறையும் என டத்தோ நிலா ராஜா கூறினார்.



