Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சிகிச்சை நிறைவடைந்தது: பிப்ரவரி 21-ஆம் தேதி நாடு திரும்புகிறார் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் 

சிகிச்சை சுமூகமான முறையில் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 21-ஆம் தேதி பேரரசர் சுல்தான் இப்ராஹிம் நாடு திரும்புவதாக இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது. 

musculoskeletal என்படும் தசை, எலும்பு தொடர்பான நோயால் பேரரசர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சையாக வெளிநாடு சென்றார்.

இளம்  பருவத்தில் விளையாட்டுத் துறையில் குறிப்பாக போலோ விளையாட்டில் பேரரசர் அதிக கவனம் செலுத்தினார். 

அதுமட்டுமின்றி, இராணுவப் பயிற்சியிலும் ஈடுப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக அவருக்குத் தற்போது musculoskeletal நோய் ஏற்பட்டிருப்பதாக இஸ்தானா நெகாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பேரரசர் விரைவில் குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்த அனைத்து மலேசியர்களுக்கும் பேரரசர் சுல்தான் இப்ராஹிம், அவர் தம் துணைவியார் ராஜா ஜரித் சோபியா ஆகிய இருவரும் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular