Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தின் புகழ்பெற்ற இதய நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் மலேசியா வருகை!

தமிழகத்தின் புகழ்பெற்ற இதய நிபுணர் டாக்டர் வி. சொக்கலிங்கம் மலேசியாவிற்கு வருகை புரியவிருக்கிறார்.
தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்த எம்.ஜி.ஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த பெருமை இவரை சேரும்.
மேலும் இந்தியாவில் 6 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர் களுக்கு டாக்டர் சொக்கலிங்கம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்
ஒரு மனிதன் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் உடன்பிறப்புகளை நேசித்து வருகிறான்.
அதே போல் அன்றாடம் நம்மை இயக்கி வரும் இதயத்தையும் நேசிக்க வேண்டும் என டாக்டர் சொக்கலிங்கம் அவ்வப்போது தமது உரைகளில் கூறி வருகிறார்.
இந்த நிலையில் சிரம்பான் ஜெயா சமூக சேவை மையம், மலேசிய ஒற்றுமை இயக்கம் மற்றும் சபா இந்தியர் இயக்கம் ஏற்பாட்டில் வரும் 22 பிப்ரவரி 2025 சனிக்கிழமை தாமான் சிரம்பான் ஜெயாவில் டாக்டர் சொக்கலிங்கம் உரை நிகழ்த்தவிருக்கிறார்.
டாக்டர் சொக்கலிங்கத்தின் உரையை செவிமடுத்து பயனடையும்படி வட்டார பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதே போல் மாக்மன்டினிலும் டாக்டர் சொக்கலிங்கம் உரை நிகழ்த்தவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் தலைமையில் நடைபெறுகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular